இன்றைய தங்கத்தின் விலை 19-09-2020
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் வெள்ளிக்கிழமை (18.09.2020 ) நேற்று இந்தியப் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தோடு முடிந்தது . இருப்பினும் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையை விடச் சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4942 க்கு விற்பனையானது . ஆனால் இன்று கிராமிற்கு 16 ரூபாய் உயர்ந்து , கிராமானது 4958 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -49588 கிராம் ( 1 சவரன் ) - 39664
தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5189க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 19 உயர்ந்து , கிராமானது ரூபாய் 5208 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5208 8 கிராம் - 41664
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது இன்று கிராமிற்கு 30 பைசா குறைந்து , கிராம் 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 70000க்கு விற்பனையாகிறது.