ஜெயிக்கப்போவது யாரு... தோனியா, ரோஹித்தா?

2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கின்றன. செப்டம்பர் 19ம் தேதி, இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு முதல் ஆட்டம் அபு தாபியில் நடைபெறுகிறது.2008ம் ஆண்டு முதல் இப்போது வரையிலான தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும் கோப்பையை வென்றுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 28 முறை இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் 17 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 11 முறையும் வெற்றியை ருசித்துள்ளன.

இப்போட்டியில் தோனி - பும்ரா, ரோஹித் - ஜடேஜா இடையிலான போராட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இதுவரை 190 போட்டிகளில் 4432 ரன்களை தோனி அடித்துள்ளார். அவரது ஸ்டிரைக்கிங் ரேட் 137.85 ஆகும். பும்ரா 77 போட்டிகளில் விளையாடி 82 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எகனாமி ரேட் 7.55 ஆகும்.

ரோஹித் 188 போட்டிகளில் 4898 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக்கிங் ரேட் கிட்டத்தட்ட 131 ஆகும். ரவீந்திர ஜடேஜா 170 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 108 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எகனாமி 7.57 ஆகும்.இரண்டாவது போட்டி துபாயில் செப்டம்பர் 20ம் தேதி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடைபெறும். அதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோத உள்ளன.

More News >>