சும்மா வந்து விட்டுப் போகட்டுமே கொரோனாவை ஈசியாக நினைத்துவிட வேண்டாம்

கொரோனாவால் பாதிக்கப்படும் 20 சதவீதம் பேரில் அந்த நோயின் தாக்கம் 6 மாதங்கள் வரை இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.கொள்ளை நோயான கொரோனா உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகின்ற போதிலும் சிலர் அந்த நோய் குறித்து அதிகமாகக் கண்டு கொள்வதில்லை. இந்த நோயைத் தடுக்க முகக் கவசம், சோப், சானிடைசர், சமூக விலகல் என இவை அனைத்தும் கட்டாயம் என அரசு எச்சரித்து வருகின்ற போதிலும் அதைப் பற்றிக் கவலைப்படாதவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். 'சும்மா வந்து விட்டுப் போகட்டுமே' எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால் அவ்வளவு ஈசியாக கொரோனாவை நினைத்துவிட வேண்டாம் என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இதுதொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ள விவரத்தைப் பார்ப்போம்... கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேருக்கும் பெரிதாக ஏதும் பிரச்சனை ஏற்படுவதில்லை. அவர்களுக்கு நோய் அறிகுறிகள் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் குறைந்துவிடும். நோயின் பின் விளைவுகளும் அதிகமாக இருக்காது. ஆனால் 20 சதவீதம் பேருக்கு மாதக்கணக்கில் இந்த நோயின் அறிகுறிகளும், அதன் தாக்கமும் இருக்கலாம். அளவுக்கு அதிகமான களைப்பு இருக்கும். சில நாட்களில் நோய் முற்றிலுமாக குணமடைந்து விட்டது போலத் தோன்றும். ஆனால் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மீண்டும் கடுமையான களைப்பு அவர்களைப் பாதிக்கும். பெண்களுக்குத் தான் தான் இந்த அறிகுறி அதிகமாக இருக்கும்.

இதுதவிர தலைவலி, இருமல், நெஞ்சு பாரம், வயிற்றுப்போக்கு, குரலில் மாற்றம் ஆகியவையும் இருக்கும். முதல் ஐந்து நாட்களில் கடுமையான இருமல், குரலில் மாற்றம், மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் காணப்படும். இதுபோன்ற அறிகுறிகள் இதய நோய் இருப்பவர்களுக்குக் காணப்பட்டால் அவர்களுக்கு அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். மரணம் கூட ஏற்பட வாய்ப்புண்டு. 6 மாதங்கள் வரை இந்த கடுமையான பாதிப்பு இருக்க வாய்ப்பு உண்டு. எனவே கொரோனாவை அவ்வளவு எளிதாக யாரும் கருதி விடக்கூடாது என்று இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் தற்போதைக்கு முகக் கவசம், சமூக அகலம் ஆகியவை மிக முக்கியமாகும்.

More News >>