மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும்!.. மத்திய கல்வி அமைச்சகம் உறுதி..!

புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. என்றாலும், மூன்றாவது மொழி என்பதை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம். மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை. மூன்றாவது மொழியாக எந்த மொழியைப் படிக்கவேண்டும் என்பதை மாணவர்களும், மாநில அரசுகளும் முடிவு செய்துகொள்ளலாம் என்று திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாகப் பதில் கொடுத்துள்ளது.

ஏற்கனவே, தமிழக அரசு இருமொழி கொள்கையைத் தமிழகத்தில் பின்பற்றப்படும் என்று உறுதியாகக் கூறியுள்ளது. இதையடுத்து தமிழக அரசின் நிலைப்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் மத்திய கல்வி அமைச்சரிடம் எழுத்துப் பூர்வமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குத் தான் தற்போது மத்திய அரசு பதில் கொடுத்துள்ளது. எனினும் தமிழக அரசு, எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக எந்தவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப் போகிறார்கள் என்பது தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

More News >>