நீட் தேர்வு விவகாரத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி ஹீரோ பரபரப்பு கருத்து..

நீட் தேர்வு எழுதப் பயந்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, நடிகர் சூர்யா சமீபத்தில் நீட் தேர்வுகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் காட்டமான அறிக்கையை வெளியிட்டார். கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது பரீட்சைகளுக்கு ஆஜராகி மாணவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது வேதனையானது. ஆனால் நீதிமன்றங்களில் வீடியோ கான்பிரன்ஸிங்கில் வழக்கு விசாரணை நடக்கிறது என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.சூர்யாவின் இந்த அறிக்கை பரபரப்பானது.

இதுகுறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உடனடியாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார். அதில் சூர்யா மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதன் மீது தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, சூர்யாவுக்கு எதிரான வழக்கு விசாரணையை நடத்தி சூர்யாவுக்கு அறிவுரை கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். தனக்கு எதிரான நடவடிக்கைகளை உயர் நீதிமன்றம் நிராகரித்ததற்குப் பதிலளித்து சூர்யா மெசேஜ் வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது: இந்திய நீதித்துறையின் நிறுவன மகத்தானது. அதன் மீது நான் மிகவும் மரியாதை கொண்டிருக்கிறேன். எப்போதும் நீதித்துறையை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருக்கிறேன்.நீதிமன்றம் தான் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான ஒரே நம்பிக்கை. மக்களின் சட்டப்படியான உரிமைகள் சென்னை உயர்நீதிமன்றத்தால் நிலை நிறுத்தி நிரூபிக்கப்படுவதைக் கண்டு மிகவும் ஈர்க்கப்பட்டிருகிக்றேன்.இவ்வாறு சூர்யா கூறி உள்ளார்.

More News >>