குரங்கணி தீ விபத்திற்கு காரணம் என்ன? - முதலமைச்சர் விளக்கம்
குரங்கணி தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு, குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “குரங்கணி மலைப் பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. காட்டு தீ குறித்து எப்.எஸ்.ஐ. எச்சரித்தும் வனத்துறை அதிகாரிகள் எப்.எஸ்.ஐ. நிறுவனத்துடன் தொடர்பில் இல்லை. அப்படி தொடர்பில் இருந்திருந்தால் அந்த சோக சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும்” என்றார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் பேசிய ராமசாமி, “மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் அனுமதிபெற்று சென்றாக கூறுகிறார்கள். முதுலமைச்சரோ அனுமதிபெறவில்லை என்கிறார். இதில் எது உண்மை என்றும் இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.
பின்னர், இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “திருப்பூர், ஈரோடு பகுதிகளில் இருந்து 12 பேரும், சென்னையில் 27 நபர்களும் தனித் தனித் குழுவாக குரங்கணியிலிருந்து டாப் ஸ்டேசன் செல்ல ஒரு நாளைக்கு மட்டுமே அனுமதி சீட்டு பெற்றுள்ளனர்.
ஆனால், அவர்கள் கொழுக்கு மலையில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் தங்கி அடுத்த நாள் மலையேற்றத்துக்கு சென்றுள்ளனர். அன்றைய தினம் அனுமதி சீட்டு பெறவில்லை. அனுமதி பெறாமல் மலையேற்றத்திற்கு சென்றதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன” என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com