திருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டு வெளியேறுங்கள் என்று சொன்னவருக்கு நடிகை சொன்ன பதில்...!
சுந்தர பாண்டியன், கும்கி, குட்டி புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியா நாடு மற்றும் அஜித் நடித்த வேதாளம் தொடங்கி பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் லட்சுமி மேனன். கடைசியாக ஜெயம் ரவி ஜோடியாக மிருதன் மற்றும் விஜய் சேதுபதியுடன் றெக்க படங்களில் நடித்திருந்தார். திடீரென்று அவரது மவுசு குறைந்தது. லட்சுமி மேனன் உடல் எடை அதிகரித்து விட்டார் என்று விமர்சனம் எழுத்தது. இதையடுத்து உடல் எடை குறைக்கவும் தனது படிப்பை தொடரவும் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். இரண்டு வருடம் விலகி இருந்தவர் படிப்பிலும் உடல் எடை குறைப்பிலும் கச்சிதமாக தேர்ச்சி அடைந்தார்.
உடல் எடை குறைத்து ஸ்லிம் தோற்றத் துக்கு மாறிய புதிய போட்டோ ஷூட் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட் டிருக்கிறார். ஆளே அடை யாளம் தெரியாதளவுக்கு அவரது தோற்றத்தில் மாற்றம் காணப்படுகிறது. அதற்கு நெட்டிஸன்கள் பேஷ் பேஷ் சொல்லி இருக்கின்றனர்.
சமீபத்தில் நடிகை தான் ஆசையாக வளர்க்கும் பூனை ஒன்றின் வீடியோவைப் பகிர்ந்து கொண்டார், அதைக்கண்ட ரசிகர் ஒருவர், என்னை திருமணம் செய்து கொண்டு நடிப்பு முழுக்கு போட்டுவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதைக்கண்ட லட்சுமி மேனன் டென்ஷன் ஆகாமல் , வளருங்கப்பா, இந்த அன்பான, நேசமான, அக்கறையுள்ள ரசிகரைப் பாருங்கள். என்னைப் போன்ற ஒரு தேவதை யாரையாவது நீங்கள் திருமணம் செய்துகொண்டு அமைதியைக் காண வேண்டும் என்று நினைக்கிறார் என தெரிவித்திருக்கிறார்,