மாநிலங்களுக்கு 3024 கோடி நிர்பயா நிதி !

நிர்பயா நிதி மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 3024 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்கள் 1919 கோடியைப் பயன்படுத்தியுள்ளன என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸிமிருதி ராணி தெரிவித்துள்ளார்.

நிர்பயா நிதி கடந்த 2013 ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு , கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயரால் நாடு முழுவதும் பெண் பாதுகாப்பை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட நிதி அமைப்பாகும். அதிகபட்சமாக டெல்லி மாநிலத்துக்கு மட்டும் 409.03 கோடி விடுவிக்கப்பட்டது. அதில் 352.58 கோடி செலவிடப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு 324.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 216.75 கோடி செலவிடப்பட்டுள்ளது . தமிழகத்திற்கு 303.06 கோடி விடுவிக்கப்பட்டதில் 265.55 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கெதிரான பாலியல் வழக்குகள் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி " பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை உரிய நேரத்தில் திறம்பட விசாரிப்பதற்காக பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களைத் திரட்டும் 14,950 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2.97 கோடியாகும் .

இதில் அதிகபட்சமாக உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு 3056 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்திற்கு 1452 கருவிகளும் , மத்திய பிரதேச மாநிலத்திற்கு 1187 கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

More News >>