வென்று வாருங்க மக்கா... சிஎஸ்கேவுக்கு ரெய்னாவின் அசத்தல் வாழ்த்து!

தனது முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை இன்னும் சற்று நேரத்தில் எதிர்கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதற்கிடையே, ஐபிஎல் இந்த சீசனில் இருந்து விலகியதுடன், சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் சென்னை அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா. இவரின் விலகலுக்கு தோனியால் வந்த சண்டை தான் காரணம் என்றும், அதனால் அணி நிர்வாகத்துக்கும் ரெய்னாவுக்குமான கருத்து வேறுபாடுதான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், ரெய்னாவின் மாமாவைக் கொள்ளையர்கள் கொன்றுவிட்டார்கள். இதனாலே அவர் இந்தியா திரும்பியுள்ளார்னார்.

இவரின் விலகல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், அது அணியை பாதிக்காது, அணியின் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்று அணி நிர்வாகம் நம்பிக்கையை பாய்ச்சி வருகிறது. இதற்கிடையே, இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்க இருக்கின்ற நிலையில் சென்னை அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. ``சென்னை அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற வாழ்த்துகள். அணியில் நான் இல்லை என்பதை நினைத்துப் பார்க்கவே கடினமாக உள்ளது. என்னுடைய வாழ்த்து எப்போதும் உங்களுடன் இருக்கும்" எனக் கூறியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

More News >>