`தினேஷ் சாதிப்பார் என்பது தெரியும்!- கேப்டன் ரோகித் ஷர்மா

இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய ஹாட் டாபிக் தினேஷ் கார்த்திக்.

வங்கதேச அணிக்கு எதிராக விளையாடிய நிதாஸ் கோப்பையின் இறுதிப் போட்டியின் இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதையடுத்து, தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் குறித்து பேசியுள்ளார், இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா.

ஷர்மா பேசுகையில், `தினேஷ் கார்த்திக்கின் திறமைக்கு அவரை டாப் ஆர்டரிலேயே இறக்கவிட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தினேஷுக்கே கீழே இறக்கி விடுவதில் விருப்பம் இல்லைதான். ஆனால், அந்த இடத்தில் அவர் நிறைய அணிகளுக்காக களமிறங்கி விளையாடி இருக்கிறார். நான் கேப்டனாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியுலும் கூட அவரை அப்படித்தான இறக்கி விட்டிருக்கிறேன்.

காரணம், அவருக்கு இறுதி ஓவர்களில் பவுண்டரி விலாசும் திறன் இருக்கிறது. சில ஆபாரமான ஷாட்களை அவர் நெருக்கடியான நேரங்களில் விளையாடுவார். அவர் சாதிப்பார் என்று நான் கணித்திருந்தேன்’ என்று கேப்டனுக்கே உண்டான பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் 8 பந்துகள் மட்டுமே பிடித்து 29 ரன்கள் விலாசினார். கடைசி பந்தில் வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் அடித்து கோப்பையை இந்தியா வசமாக்கினார். தோனி ஓய்வு பெறப் போவதாக பேச்சுகள் அடிபட்டுக் கொண்டிருக்கையில் தினேஷ் கார்த்திக்கின் மாஸ் கம்-பேக் வெகுவாக கவனம் பெற்றுள்ளது.

 

More News >>