பிரபல இயக்குனர் மீது தமிழ் நடிகை பாலியல் புகார் கூறியதால் பரபரப்பு..
ஹாலிவுட் தொடங்கி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா திரையுலகிலும் மீ டு புகார்கள் கடந்த சில வருடங்களாக சொல்லப்பட்டு வருகின்றன. பாலிவுட்டில் பிரபல நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் தொல்லை புகார் கூறினார். கோர்ட் வரை சென்றபோதும் போதுமான ஆதாரம் இல்லாததால் அவர் மீதான புகார் ரத்தானது.
இந்நிலையில் பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். அனுராக் காஷ்யப் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார். இந்தியில் தேவ்டி. தி லன்ச் பாக்ஸ் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இவர் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறினார்.தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்திருக்கிறார் பாயல் கோஷ். மேலும் படேல் கி பஞ்சாபி ஷாதி இந்தி மர்றும் ஒசரவல்லி தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகை ஆக வேண்டும் என்ற ஆசையில் இயக்குனர்களை அணுகி வாய்ப்பு கேட்பேன் இப்படித்தான் ஒரு இயக்குனரை சந்திது வாய்ய்பு கேட்டேன் அவர் என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று ஆபாச படம் போட ஆரம்பித்தார். நான் ஷாக் ஆகிவிட்டேன். என்னை பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்தினார். அங்கிருந்து தப்பி ஓடி வந்தேன். அந்த இயக்குனர் அனுராக் காஷ்யப். இதை வெளிப்படுத்துவதால் எனக்கு ஆபத்து இருக்கும். எனக்கு பிரதமர் உதவ வேண்டும் என்றார்.
அனுராக் தன்னிடம் தவறாக நடந்ததற்கு ஆதாரம் இல்லை. ஆனால் நான் சொல்வது நிஜம் என பாயல் கோஷ் கூறி இருக்கிறார்.