டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசாக மாறும் பிரபல நடிகை.. மிரள வைக்க கேமராவை நவம்பரி லிருந்து சுழல்கிறது..
கேங்ஸ்டர், மாறுபட்ட காதல் கதைகளை, டிடெக்டிவ் என இயக்கி வந்தவர் இயக்குனர் மிஷ்கின் . திடீரென்று கடந்த 2014ம் ஆண்டு பிசாசு என்ற திகில் படத்தை இயக்கினார்.
அப்படம் வரவேற்பை பெற்றது. இதில் நாகா, பிரயாக மிர்த் நடித்தனர். மீண்டும் அவர் சமூக படங்களை இயக்கி வந்தார். கடைசியாக அவரது இயக்கத்தில் சைக்கோ என்ற திரில்லர் படம் வெளியானது. இதை யடுத்து துப்பறிவாளன் 2 ம் பாகத்தை விஷால் நடிக்க இயக்கி வந்தார். அதில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்படவே அப்படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார். இதையடுத்து சிம்பு, அருண் விஜய் ஆகியோர் படங்களை இயக்க பேச்சு நடப்பதாக தகவல் வந்தது. புதிய படம் பற்றி எதுவும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாமலிருந்த நிலையில் ஆனால் திடீரென்று திகில் படத்துக்கு மாறி இருக்கிறார் மிஷ்கின். பிசாசு படத்தின் 2ம் பாகம் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.
இதுபற்றி பட நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்:ராக்ஃபோர்ட் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியுடன் அடுத்த தயாரிப்பாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2104ம் ஆண்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற பிசாசு படத்தின் 2ம் பாகத்தை பிசாசு2 என்ற பெயரில் தயாரிக்கிறோம். நடிகை ஆண்ட்ரியா முதன்மை பத்திரத்தில் நடிக்கிறார். வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதில் மேலும் ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.முருகானந்தம் தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார்.