அடிமுறை சண்டை, கிக் பாக்ஸிங், பொய் நடன ஸ்டன்ட் பயிற்சிகளில் அசத்தும் ஹீரோயின்கள்.. ஹீரோக்கள் இடத்தை பிடிக்க முயற்சி..
ஹாலிவுட் படங்களில் குறிப்பாக ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஜேம்ஸுடன் மோதும் தடலாடி பெண்கள் ஆச்சர்யம் மூட்டும் வகையில் அதிரடியாக ஸ்டன்ட் காட்சிகளில் நடிப்பார்கள் சமீப காலங் களில் நம்மூர் ஹீரோயின்களும் ஸ்டன்ட் காட்சிகளில் தைரியமாக டூப் போடாமல் நடிக்க முன்வருகிறார்கள். அதற்காக சிறப்பு பயிற்சியும் பெறுகின்றனர். இதன்மூலம் ஹீரோக்களின் இடத்தை பிடிக்க முயற்சியும் மேற்கொள்கிறார்கள்.
நடிகை ஸ்ருதிஹாசன் சங்கமித்ரா படத் திற்காக லண்டன் சென்று வாள் பயிற்சி பெற்றார். ஆனால் அப்படத்திலிருந்து அவர் திடீரென்று விலகினார். சமீபத்தில் ஆங்கில வெப் சீரியலுக்காக கிக் பாக்சிங் பயிற்சி பெற்ற வீடியோவை வெளியிட்டி ருந்தார். அதேபோல் நடிகை சினேகா நடிகர் தனுஷுடன் நடித்த பட்டாசு படத் துக்காக அடி முறை சண்டைக் கலை கற்றார்.
வேட்டை, வெடி, வாரணம் ஆயிரம் படங் களில் நடித்த சமீரா ரெட்டி தனது இன்ஸ் டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில் பொய் என்ற கலையை கற்றது குறித்து செய்முறை விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது,முபாசர் என்ற படத்துக்காக சுமார் 15 வருடத்துக்கு முன்பு பொய் என்ற கலையை கற்றேன் வீட்டில் பழைய விஷயங்களை யோசித் துக்கொண்டிருந்தபோது இது ஞாபகத் துக்கு வந்தது. அதற்கான உபகரணம் கிடைத்ததும் எடுத்து சுழற்ற தொடங்கி விட்டேன் . 15 வருடத்துக்கு முன்பு கற்றது நேற்று கற்றுக்கொண்டது போல் உள்ளது.பொய் என்ற கலை நியூசிலாந்தை சேர்ந்த மரோரி மக்களிடமிருக்கும் ஒரு பாரம் பரிய கலை. கோவாவில் இந்த கலையை 2014 ம் ஆண்டு நான் கற்றேன். இதுவொரு மேஜிக் போன்று என் வாழ்நாள் முழுவ தும் இருக்கிறது. இதுபோன்ற கலைகளை நான் மீண்டும் பயிற்சி செய்வதால் என்னை ஆக்டிவாக வாஇத்துக்கொள்கி றேன். இது நடன முறையான கலை என்றார் சமீரா