கொஞ்சம் மூளைய யூஸ் பண்ணுங்க பாஸ்!
தினமும் எழுந்ததும் பரபரப்பாக் கிளம்பி வேலைக்கு போறது, முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து டிவி முன்னாடி உட்காறது என இன்னும் எத்தன வருஷத்துக்கு செய்யப்போறோம். கொஞ்சம் ரூட் மாத்தி போனதான் மூளைக்கும் ஏதாவது வேலை இருக்கும். அப்படி மூளைக்கு வேலை தந்தால் தானே நம்ம லைஃப் ஆரவாரமாப் போகும்.
1. டேக் லெஃப்ட்:
சின்ன சின்ன வேலைகளை இனி நாம எப்பவும் வலது கையில் செய்தால் அதை இடப்பக்கமா மாத்திக்கோங்க. கதவு திறப்பது, ஒரு பொருளை எடுத்துக்கொடுப்பது என வலது கை பயன்படுத்துறவுங்க நேரம் கிடைக்கும் போது இடதுகையில் செய்து பாருங்க. அதுபோல இடக்கையில் செய்றவுங்க வலக்கையில் செய்து ரொட்டீன மாத்துங்க.
2. பட்டியலைப் பார்க்காதீங்க!
எல்லாத்துக்கும் லிஸ்ட் போட்டு வேலை செய்தால் நல்லாவா இருக்கும். ஷாப்பிங் போகும் போது லிஸ்டை ஒரு பேக்-அப் மாதிரி மட்டும் யூஸ் பண்ணுங்க. எவ்வளவு ஞாபக சக்தி இருக்குன்னு உங்களுக்கேத் தெரிஞ்சிடும்.
3. உங்க மொபைல் நம்பர் தெரியுமா?
ஸ்மார்ட் போன் வந்தாலும் வந்தது நம்ம மொபைல் நம்பரைக் கூட நாம கான்டாக்ட் லிஸ்ட் பார்த்துதான் சொல்றோம். ஒரு மாறுதலுக்காக உங்களுக்குத் தெரிஞ்சவுங்க நம்பரை மனப்பாடம் செய்து பாருங்களேன்!
4. கதை சொல்லுங்க!
தினமும் ஒரு கதை சொல்றது நல்லதாம். இது ஞாபக சக்தியை மட்டுமில்லை உங்கள் கற்பனைத் திறனையும் வளர்க்குமாம். இந்த டாஸ்க் நிறைய பேருக்கு கை வந்த கலையாக இருக்க வாய்ப்பிருக்கு!
5. வாசியுங்கள்…
தினமும் கையில் கிடைக்கும் ஏதோவொரு புத்தகமோ, டெய்லி பேப்பரோ எடுத்து வாசியுங்கள். எது நமது மூளைக்கு நல்ல வேலை தரும். சில நேரத்தில் அறிவாளியாகி நமக்கு சம்பாதிக்கும் அளவுக்குக் கூட ஒரு ஸ்பெஷல் வேலை தரலாம். யாருக்குத் தெரியும், உள்ளேயிருந்து ஒரு எடிசன், ஒரு ஐன்ஸ்டீன் கூட உருவாகலாம்!