சத்யராஜை கட்டப்பாவாக்கி அசத்திய பாகுபலி இயக்குனர் மற்றொரு நடிகரை அசர வைத்தார்..
என்னாமா கண்ணு, என்னய புரிஞ்சிக்க வே மாட்டேங்கிறியே என்று பல பஞ்ச் வசனங்கள் பேசி பாப்புலர் ஆனவர் சத்ய ராஜ், ஹீரோவாக நடித்த காலம் முடிந்து அப்பா வேடங்களுக்கு ஒகே சொல்லிக் கொண்டிருந்தவரை தெலுங்கிற்கு அழைத்துச் சென்றார் இயக்குனர் எஸ் எஸ். ராஜம்வுலி. பாகுபலி படத்தில் நீங்கள்தான் கட்டப்பா என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறீர்கள். இந்தாங்க சம்பளம் என்ற ஒரு பெருந்தொகையை தந்தார். ஹீரோவாக நடித்தபோது வாங்கிய சம்பளத்தைவிட அதிகம். அசந்துபோனார் சத்யராஜ். அதேபாணியில் மற்றொரு நடிகரை அழைத்துச் சென்றிருக்கிறார் ராஜ்மவுலி. ஜூனிடயர் என் டி ஆர், ராம்சரண் நடிக்கும் ஆர் ஆர் ஆர் என்ற படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார்.
டைரக்டர் ராஜமவுலி படத்தில் வாய்ப்பு வந்தால் சம்பளமே வாங்காமல் நடிக்க தயார் என்று சமுத்திரக் கனி கூறியிருந்தார். அவரைத்தான் தற்போது ராஜமவுலி அழைத்துச் சென்று, ஆர் ஆர் ஆர் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதற்கு அவர் கொடுத்த சம்பளம் இதுவரை சமுத்திரக் கனி வாங்கியதைவிட மிக அதிகம். இயக்குனர் ராஜமவுலியின் செயலை கண்டு அசந்துவிட்டாராம் சமுத்திரக்கனி.