கொரோனா பாதிப்பு, மெனோபாஸ், வழுக்கை, குழந்தை பேறின்மையை மாற்றுவதற்கு இதை சாப்பிடுங்க!

சிவப்பு நிற விதைகள் அவை. பெரும்பாலானோருக்கு அவற்றைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நவீனக்கால பரபரப்பில் மறக்கப்பட்ட, ஆனால் நன்மைகள் நிறைந்த விதை: ஆளி விதை.கூந்தல் வளர்ச்சி, பிரசவத்திற்குப் பின்னர் தாயின் ஆரோக்கியம், பாலூட்டும் தாய்மார் என்று ஆளி விதைகள் பல்வேறு நிலையிலுள்ள நபர்களுக்குப் பயன்படக்கூடியது. பாரம்பரிய வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் இவ்விதைகளை முற்றிலுமாக மறந்துபோனால் இழப்பு நமக்குத்தான்!

கொரோனா பாதிப்பு

ஆளி விதைகளில் இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் இ மற்றும் ஏ ஆகியவை அதிகமாக உள்ளன. இவற்றுக்கு உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் பண்பு உள்ளது. குறிப்பாக இப்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீள்பவர்களுக்கு இது அதிக பயனுள்ளதாக இருக்கும்.

குழந்தைப் பேறு

குழந்தைப் பேற்றை எதிர்பார்த்திருப்பவர்கள் கண்டிப்பாக ஆளி விதைகளை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் கருவுறக்கூடிய வாய்ப்பை ஆளி விதைகள் அதிகரிக்கும்.

பருவ பெண்கள்

பருவ வயதை எட்டும் சிறுமிகளுக்கு ஆளி விதைகள் மிகுந்த நன்மை செய்யும். பூப்படையும் வயதிலுள்ளவர்களுக்கு இது தவிர்க்கக்கூடாத உணவு. பருவ வயதில் பரு உண்டாவதைத் தடுக்கும் ஆற்றலும் உண்டு. அப்பருவத்தில் ஏற்படும் மனநிலை மாறுபாடு, சர்க்கரையின் மீது அதிகமான தேட்டம் ஆகியவற்றை ஆளி விதை குறைக்கும்.

மெனோபாஸ்

மாதவிடாய் நிற்கும் வயதை எட்டும் பெண்கள் சிலருக்குச் சருமத்தில் பாதிப்பு ஏற்படலாம். ஆளி விதைகளைச் சாப்பிட்டால் அப்பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம்.

வழுக்கைத்

தலையில் புழு வெட்டு என்ற முடி கொட்டும் பிரச்சனை இருப்பவர்கள் ஆளி விதையைச் சாப்பிட்டுப் பயனடையலாம். நடுத்தர வயதில் வழுக்கை விழ ஆரம்பித்தால் ஆளி விதையைச் சாப்பிட்டு முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.

கீமோ தெரபி

ஆளி விதைகளுக்கு கீமோ பாதுகாப்பு இயல்பு இருக்கிறது. சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகள் ஆளி விதைகளை உணவில் சேர்ப்பது நன்மை தரும்.

ஆளி விதை லட்டு

பாரம்பரியமாக ஆளி விதைகளை ஆரோக்கியமான கொழுப்புடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள். ஆகவே நெய், தேங்காய், வெல்லம் ஆகியவற்றுடன் ஆளி விதைகளைச் சேர்த்து லட்டு சேர்த்துச் சாப்பிடலாம். ஆளிவிதையிலுள்ள ஊட்டச்சத்துகள் உடலில் சேர்வதற்குக் கொழுப்பு உதவும்.

ஆளி விதைப் பால்

இரவு முழுவதும் ஆளி விதைகளை ஊற வைத்து அவற்றைப் பாலுடன் சேர்த்து படுக்கைக்குச் செல்லும் முன்னர் பருகி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

More News >>