பாம்புகளின் தோழன் அபு ஜாரின் ராஜநாகம் கடித்து பலி

எப்பேற்பட்ட பாம்பையும் தன் வசம் கொண்டு வரும் பிரபல தீயணைப்பு வீரர் அபு ஜாரின் உசைன் ராஜநாகம் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பாம்புகளுக்கு தோழனாக விளங்கியவர் மலேசியாவின் கோலாலம்பூர் நகரை சேர்ந்த அப் ஜாரின் உசைன்(33). தீயணைப்புத்துறை வீரரான இவர் பாம்புகளை பிடிப்பதில் கெட்டிக்காரர் என்றே கூறலாம். சிறிய பாம்புகள் முதல் பெரிய பாம்புகள் வரை அனைத்துடனும் மிகவும் சகஜமாக பழகி வந்தார். விஷமுள்ள பாம்புகளை சாதாரணமாக பிடித்து அதை கொஞ்சுவது, முத்தம் கொடுப்பது போன்ற அசாதாரண செயல்களிலும் ஈடுபட்டு வந்தார்.

பாம்புகளுடன் இவர் செய்யும் லூட்டிகளை, யூடியூப்களில் அனைவராலும் பிரபலமாக பார்க்கப்படும். இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு, கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அதை பிடிக்க முயன்றபோது, அபு ஜாரின் உசைனை ராஜநாகம் கடித்தது. இதில், உடல் முழுவதும் உசைனுக்கு விஷம் ஏறியதை அடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அபு ஜாரின் உசைன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாம்புகளின் தோழனாக இருந்தவரே பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அனைவரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>