பிரபல நடிகர் இயக்கி நடித்த செக்யூரிட்டிக்கு போர்ட்பிளேயரில் சர்வதேச விருது..

தளபதி விஜய் நடிக்க ஏ.எல்விஜய் இயக்கிய தலைவா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததுடன் திருநெல்வேலி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருப்பவர் உதயா, இவர் எழுதி முதல்முறையாக இயக்கிய "செக்யூரிட்டி" குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக இணையதளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.

பல அரசியல் தலைவர்கள், திரை உலக ஜாம்பவான்கள், பத்திரிகை ஊடகம் இணைய தளம் மற்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.நம் இந்திய ராணுவ வீரர்களுக்குச் சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தைப் பார்த்து மறைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் இப்படத்தைப் பார்த்து உதயாவை பாராட்டியுள்ளனர்.

காஸ்மோ திரைப்பட விழா (cosmo film festival), சவுத் பிலிம் மற்றும் ஆர்ட்ஸ் அகடமி (south film and arts academy) சவுத் அமெரிக்கா (south america) மற்றும் பல்வேறு திரைப்பட விழாக்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் போர்ட்பிளேயர் இண்ட்ர்நேஷனல் திரைப்பட விழா (PORTBLAIR INTERNATIONAL FILM FESTIVAL) விழா என 20 நாடுகள் கலந்துகொண்ட போட்டியில் சிறந்த இந்தியக் குறும்படம் ஆக "செக்யூரிட்டி" தேர்வாகி வென்றுள்ளது.

More News >>