மகளின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் மூலம் வாழ்த்து தெரிவித்த நடிகர் பாலா
8வது பிறந்த நாள் கொண்டாடிய தனது மகள் அவந்திகா வுக்கு நடிகர் பாலா பேஸ்புக் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.பிரபல தமிழ் நடிகர் பாலா மலையாளத்தில் புதிய முகம், களபம் புல்லட், அலெக்ஸாண்டர் தி கிரேட், ரிங்டோன், அவன், புலி முருகன் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மலையாளத்தில் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். புலிமுருகன் படத்தில் இவர் மோகன்லாலுக்கு வில்லனாக நடித்திருந்தார். சூப்பர் ஹிட்டாக ஓடிய அந்த படத்தில் பாலாவின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.இந்நிலையில் பாலாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த பின்னணி பாடகி அமிர்தாவுக்கு கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2012ல் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அவந்திகா என அந்த குழந்தைக்கு பெயர் சூட்டினர். இந்நிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். கடந்த வருடம் இருவரும் சட்டபூர்வமாக பிரிந்தனர். இந்நிலையில் பாலாவின் மகள் அவந்திகாவுக்கு இன்று 8வது பிறந்த நாளாகும். தற்போது பாலா சென்னையில் உள்ளார். பிறந்தநாளுக்கு மகளை பார்க்க முடியாத வேதனையில் இவர் தனது பேஸ்புக்கில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'ஹேப்பி பர்த்டே டூ யூ பப்பு, நான் எப்போதும் உன்னுடனே இருக்கிறேன். என்னுடைய வாக்கை நான் காப்பாற்றி விட்டேன். உன்னால் என்னை பார்க்க முடியாவிட்டாலும் நான் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று பாலா வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.