12 ஐபிஎல் லீக்வரை ஒரு முறை கூட கோப்பையை தொடகூட பாக்கியம் இல்லாமல் , இந்த சீசனிலாவது கோப்பையை வென்றுவிடுவார்களா?

ஐபிஎல் லீக் காய்ச்சல் ஆரம்பித்த மூன்றாவது நாளான இன்று (21-09-2020) ராயல் சாலஞ்சர் பெங்களூர் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் இடையேயான முதல் போட்டி துபாய் கிரிக்கெட் அரங்கத்தில் இன்று இரவு 7.30 க்கு நடைபெறவுள்ளது.

12 ஐபிஎல் லீக்வரை ஒரு முறை கூட கோப்பையை தொடகூட பாக்கியம் இல்லாமல் , இந்த சீசனிலாவது கோப்பையை வென்றுவிடலாம் என்ற கனவோடு கேப்டன் விராட் கோஹ்லி தலைமையில் பெங்களூர் அணி களம் இறங்கவுள்ளது . ஒரு முறை கோப்பையை தனதாக்கி கொண்ட தெம்போடு , இந்த ஆண்டும் மகுடம் சூடி விடலாம் என்ற முனைப்போடு டேவிட் வார்னர் தலைமையில் களம் இறங்க உள்ளது சன் ரைசஸ் ஹைதராபாத் அணி.

இதுவரை நடந்த அனைத்து ஐபிஎல் தொடரிலும் மிகவும் பயங்கரமான வீரர்களை கொண்டு விளையாடிய பெங்களூர் அணியால் வாகை சூட முடியாமல் போனது. இதற்கு காரணமாக அவர்களின் பந்துவீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசாததால் தான் என்று அவ்வணியின் ரசிகர்கள் புலம்புகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் சீசனில் இதற்கான பதிலோடு களமிறங்குகிறது பெங்களூர் அணி.

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் , சிறந்த பவுலர்கள் என ஒரு பட்டாளமே இன்று மிரட்ட தயாராக உள்ளது .

பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஆரோன் பின்ச் மற்றும் பார்த்திவ் படேல் அல்லது தேவ்தூட் படிக்கல் களமிறங்க வாய்ப்புள்ளது . மிடில் ஆர்டரில் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவர். பந்து வீச்சை பொறுத்தவரை கிரிஸ் மோரிஸ் அவரின் விலைக்கேற்ப சிறப்பாக செயல்படுவார். மேலும் சிவம் தூபே , சுந்தர் மற்றும் நவ்தீப் சைனி போன்றோர் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த உதவுவார்கள். எப்பொழுதும் போல் சஹல் தனது சுழலின் மூலம் அவரின் பலத்தை நிறுபிக்க வாய்ப்புண்டு . அனைத்து நிலைகளிலும் நேர்த்தியான வீரர்களை கொண்டு களமிறங்க தயாராக உள்ளது பெங்களூர்.

சன் ரைசஸ் ஹைதராபாத்

இந்த அணியை பொறுத்தவரை 2016 விருந்து அனைத்து சீசனிலும் பிலேஆப் சென்றுள்ளனர். இது அவர்களின் நம்பிக்கையை இனினும் திடகாத்திரமாக வைக்கும் . இந்த ஆண்டில் ஃபாபியன் ஆலன் மற்றும் அப்துல் சமத் போன்றோரை அடிப்படை விலையில் எடுத்துள்ளனர் .

இவ்வணியில் தொடக்க ஆட்டக்காரராக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்ட்டோ களமிறங்க வாய்ப்புள்ளது ‌ . பேர்ஸ்ட்டோ கடந்த வாரம் நடந்த ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் சதம் அடித்து நல்ல பார்மில் உள்ளார். மேலும் கேப்டன் வார்னர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மிக பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும். மிடில் ஆர்டரில் மனிஷ் பாண்டே மற்றும் மொஹம்மது நபி , அப்துல் சமத் போன்றோர் அவர்களின் பங்களிப்பை தரும் பட்சத்தில் அணியின் வெற்றி மிக சுலபமாக இருக்கும். பந்து வீச்சை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார் , சந்தீப் சர்மா போன்றோரும் சுழல் பந்துவீச்சை பொறுத்தவரை நபி மற்றும் ரஷித் கான் மிரட்ட தயாராக உள்ளனர்.

துபாய் கிரிக்கெட் அரங்கத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயிப்பவர் பந்து வீச்சை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் பலத்தை பொறுத்தவரை பெங்களூர் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது . சன் ரைசஸ் ஹைதராபாத் அணி நேர்த்தியாக பந்து வீசினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

More News >>