தனிவிமானத்தில் காதலனுடன் வந்து இறங்கி பந்தா காட்டிய நயன்தாராவால் பரபரப்பு.. மூக்கின்மேல் விரல் வைத்த கோலிவுட்..
இதுவரை யாரும் இப்படிச் செய்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நடிகை நயன்தாரா பந்தா காட்டி ரசிகர்களை மட்டுமல்ல கோலிவுட் ஸ்டார்களையே மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கில் கடந்த 5 மாதமாகப் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார் நயன்தாரா. அவருடன் காதலன் டைரக்டர் விக்கேஷ் சிவனும் உடனிருந்தார். அவ்வப்போது இருவரும் புகைப்படங்கள் பகிர்ந்த நிலையில் நயன்தாராவுக்கு கொரோனா என்று யாரோ வதந்தி கிளப்பி விட வதந்தி கிளப்பியவர்களுக்கு நய்யாண்டி செய்து நயனும் விக்னேஷும் பதிலடி தந்தனர்.
இருவரும் சிறுவர்கள் போல் தங்களது தோற்றத்தை வீடியோ கிராபிக்ஸில் மாற்றிக்கொண்டு நடனம் ஆடி கொரோனா வதந்தி கிளப்பியவரை நக்கலடடித்தனர்கொரோனா ஊரடங்கிலிருந்து மீண்டு எப்போதுதான் காதலியுடன் ஊர் சுற்றப் போகிறேனோ என்று விக்னேஷ் சிவன் ஆதங்கப்பட்டார். அவரது ஆசையை ஆச்சரியமூட்டும் வகையில் நிறைவேற்றி வைத்திருக்கிறார் அன்பு காதலி நயன்தாரா.
ஓணம் கொண்டாட்டத்துக்கு விக்னேஷை தனி விமானத்தில் கேரளாவுக்கு அழைத்துச் சென்று விழா கொண்டாடி மகிழ்ந்தார்.பிறகு அங்கிருந்து விக்னேஷ் சிவனுடன் தனது தாயாரையும் அழைத்துக்கொண்டு கோவா சென்றார். அங்குத் தாயின் பிறந்த நாளையும், விக்னேஷ் சிவன் பிறந்த நாளையும் நயன்தாரா கொண்டாடினார். கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டு நயன், விக்னேஷ் ஜோடி தனி விமானத்தில் மீண்டும் சென்னை திரும்பியது அவர்கள் இருவரும் தனி விமானத்தில் வந்து இறங்கிய படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது.
காதலனைத் தனி விமானத்தில் அழைத்துச் சென்று பந்தா காட்டியிருக்கும் நயன்தாரா ரசிகர்களையும் கோலிவுட்டினரையும் மூக்கின்மேல் விரல் வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.