ஒன்பிளஸ் புதிய செயலி: விரைவில் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்..!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுள் ஒன்றான ஒன்பிளஸ், ஒன்பிளஸ் வெதர் மற்றும் ஒன்பிளஸ் நோட்ஸ் போன்ற செயலிகளைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்படி செய்துள்ளது. ஒன்பிளஸ் மெசேஜஸ் என்ற செயலியும் பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும்.ஒன்பிளஸ் மெசேஜஸ் செயலியில் குறுஞ்செய்திகளை வகைப்படுத்தும் வசதி இருக்கும். செய்திகள் மொத்தமாகக் காணப்படாமல் பரிவர்த்தனை (transactions), விளம்பரவகை (promotions) மற்றும் ஓடிபி (OTP) என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும்.

ஓடிபி வரும் செய்தியிலிருந்து அதை அப்படியே பெற்றுக்கொள்ள 'Copy OTP' என்ற வசதியும் இருக்கும். ஓடிபி (OTP) உடன் வரும் செய்தியுடன் இதற்கான தெரிவும் இணைந்து காணப்படும். 'படிக்கப்பட்டது' (Mark as read) என்று செய்திகளைக் குறிப்பிடும் வசதியும் இந்தப் புதிய செயலியில் கிடைக்கும்.ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய சிறப்பு வெளியீடான ஒன்பிளஸ் 8டி 5ஜி, அக்டோபர் மாதம் 14ம் தேதி உலக அளவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

More News >>