எம்ஜிஆருடன் நடித்த பாலிவுட் நடிகைக்கு கொரோனா.. வென்டிலேட்டரில் ஆக்ஸிஜன் சிகிச்சை அளித்து உயிரை மீட்டனர்..
சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் பரவி ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. 5 மாதத்துக்கும் மேலாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவாமலிருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா குறைந்ததாகத் தெரிவில்லை மக்களின் வாழ்வாதாரம், இந்தியாவின் பொருளாதாரம் தான் சரிந்தது. இதற்கு மேலும் தாக்குப்பிடிக்காது என்ற நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கிடையில் பல லட்சம் பேர் வேலை இழந்து தெருவுக்கு வந்துவிட்டனர்.
கொரோனாவைவும் டைய்பாய்டு, மலேரியா காய்ச்சல் வரிசையில் சேர்த்து விட்டு மக்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கி இருக்கின்றனர். பிரபல சினிமா ஸ்டார்கள் கொரோனா தொற்றுக்குத் தப்பவில்லை. நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன். விஷால், ராஜமவுலி, கீரவாணி. ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன். ஜெனிலியா, மலைகா அரோரா எனப் பல சினிமா நட்சத்திரங்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகிறார். சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர்.
பாலிவுட் நடிகைகள் இன்றைக்கு நிறையப் பேர் தமிழில் நடிக்கின்றனர். அந்த காலத்தில் ஹீரோயின்கள் பெரும்பாலும் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழியிலிருந்தே வந்து தமிழ் படங்களில் நடிப்பார்கள். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தனது படங்களில் புதிய முயற்சிகள் மேற்கொள்வார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தாய்லாந்து நடிகை மெட்டா ரூன் கிரேட் என்ற நடிகையை நடிக்க வைத்தார். நவரத்னம் படத்தில் பாலிவுட் நடிகை ஜரீனா வஹாப்பை அழைத்து வந்து நடிக்க வைத்தார். இவர் கைவரிசை என்ற படத்தில் ஜெய்சங்கருடனும் நடித்தார்.
ஜரினா வஹாப் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கிறார். உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலைக்கு அவரது உடல்நிலை சென்றதால் வென்ட்டிலேட்டர் பொருந்தப்பட்டு ஆக்ஸிஜன் சுவாச நிலை சீராக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் தனி அறையில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஜரினா வஹாப் இந்தி படத் தயாரிப்பாளர் ஆதித்யா பஞ்சோலி என்பவரை மணந்தார். இவர்களுக்கு சூரஜ் பஞ்சோலி என்ற மகன், சனா என்ற மகள் உள்ளனர். இவர்கள் படங்களில் நடித்து வருகின்றார்கள்.