மும்பையில் புயலை கிளப்பிவிட்டு மனாலியில் ஜாகிங் பயிற்சி செய்யும் ஹீரோயின்.. திரும்பிவந்தால் போதை விவகாரம் கிளப்ப சிவசேனா திட்டம்..

பாலிவுட் திரையுலகம் மீது போதை மருந்து குற்றச்சாட்டு சொன்ன கங்கனா,மகாராஷ்டிரா ஆளுக்கட்சி சிவசேனா கட்சியினையும் தாக்கினார். பிறகு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் கூறி மத்திய அரசிடமிருந்து கமாண்டோ பாதுகாப்பு பெற்றார் கங்கனா. சிவசேனா கட்சியினருடன் கங்கனா மோதல் தொடங்கியதும் அவருக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். மனாலியிலிருந்து அவர் கமாண்டோ பாதுகாப்புடன் மும்பை வந்தபோது சிவசேனா ரசிகர்கள் கங்கனாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மீது போதை மருந்து பயன்படுத்தியது தொடர்பாக கங்கனா பேசிய வீடியோ ஒன்று வைரலானது. இதையடுத்து அவர் மீது போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தவிருப்பதாக தகவல் வெளியானது இதனால் அவர் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான மனாலி புறப்பட்டுச் சென்றார்.மனாலி சென்ற கங்கனா எந்த குற்றச் சாட்டும் சொல்லாமல் தனது ஒர்க் அவுட் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

அங்குள்ள அழகான பூங்காவில் ஜாகிங் செய்யும் படத்தை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார். கறுப்பு டி ஷர்ட் மற்றும் பேண்ட்டை அணிந்து நீல நிற ஜாக்கெட்டை இடுப்பில் கட்டிக்கொண்டு கங்கனா தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடிக்கிறார். மேலும் தாகாத், தேஜாஸ் போன்ற இந்தி படங்களிலும் நடிக்க உள்ளார்.

More News >>