ஸ்டார் ஓட்டலில் தலையணை உறை திருடிய பிரபல நடிகை.. ஒப்புதல் வாக்குமூலம் தந்து திருட்டை ஒப்புக்கொண்டார்..
பெரும் முன்னணி நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்குச் சென்றால் அந்த ஊரில் பெரிய ஓட்டல்களில் தான் தங்குவார்கள் சிட்டியில் ஷூட்டிங் என்றால் ஸ்டார் ஓட்டலில் தங்குவார்கள். நடிகை ராஷ்மிகாவும் நகரங்களில் படப்பிடிப்பு என்றால் ஸ்டார் ஓட்டலில்தான் தங்குவார்.ராஷ்மிகா கன்னட படங்களில் நடித்த நிலையில் தெலுங்கு படத்தில் நடிக்க வந்தார். அது பெரிய அளவில் கை கொடுத்தது. விஜய தேவர கொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் அவரை பெரிய அளவில் உயர்த்தி விட்டது. தற்போது அல்லு அர்ஜூனுடன் புஷ்பா என்ற படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் ராஷ்மிகா தனது ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தார். சமீபத்தில் நீங்கள் செய்த ருசிகர திருட்டு என்ன என்று ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு ராஷ்மிகா, சமீபத்தில் ஸ்டார் ஓட்டலில் தங்கி இருந்தேன். அங்கிருந்த தலையணை உறை மிகவும் அழகாக இருந்தது அதை நான் திருடிவிட்டேன் என்றார்.ராஷ்மிகாவின் இந்த செல்ல மற்றும் சின்ன திருட்டு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ராஷ்மிகா எப்போது தமிழில் நடிப்பார் என்று சிலர் கேட்டு வருகின்றனர். அவர் கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பைப் பெரும்பகுதி முடித்து விட்டது. சீக்கிரமே படம் திரைக்கு வரத் தயாராகி வருகிறது.