நடராஜனின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது - ஸ்டாலின்
நடராஜன் திராவிட இயக்கத்தின் மீது அளவு கடந்த பற்று கொண்டவராக இருந்தவர் என்றும் அவரது மறைவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடநத் 16ஆம் தேதி முதல் உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அவருக்கு செயற்கை சுவாச கருவிமூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
நடராஜனுக்கு ஏற்கனவே சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது. இதனால், கடந்த ஆண்டு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று அதிகாலை நடராஜன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சென்னை பெசன்ட் நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, உள்ளிட்டோர் நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “ம.நடராஜனின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. திராவிட இயக்கத்தின் மீது அளவு கடந்த பற்று கொண்டவராக இருந்தவர் நடராஜன். மாணவர் பருவத்தில் தமிழ் மொழிக்காக நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர் பங்கேற்றவர்” என புகழாரம் சூட்டினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com