கொல்கத்தாவிற்கு முதல் போட்டி, ஆனால் மும்பைக்கு நிருபிக்க வேண்டிய கட்டாயம்? - இன்றைய போட்டியில் யார் வெல்ல வாய்ப்பு இருக்கிறது?

ஐபிஎல் லீக் சுற்றின் ஐந்தாவது போட்டியானது மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடைபெற உள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணி இதே ஆடுகளத்தில் இந்த சீசனின் முதல் போட்டியைச் சென்னைக்கு எதிராக விளையாடித் தோற்றது . எனவே இரண்டாவது போட்டியை வெற்றிபெற வேண்டிய நிர்ப்பந்தத்துடன் இன்று களமிறங்கும்.கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை இன்றைய போட்டிதான் முதல் போட்டி என்பதால் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் களமிறங்க உள்ளது.

ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தவரைச் சுழல் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் மேலும் ஆட்டத்தின் பிற்பாதியில் பனிப்பொழிவின் தாக்கம் முக்கிய பங்கினை வகிக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்யவாய்ப்புண்டு .

MI vs KKR openers

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கும் குயின்டன் தி காக் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆட்டத்தின் போக்கினை மாற்றக்கூடிய அதிரடியான வீரர்கள் . முதல் போட்டியில் சோபிக்க தவறிய இவர்கள் இன்றைய போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புண்டு.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரைத் தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மான் கில் மற்றும் சுனில் நரேன் களமிறங்க வாய்ப்புண்டு. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சுனில் நரேனின் சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை . கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 8 இன்னிங்ஸ் சில் ஆடி வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

எனவே இவரைத் தொடக்க ஆட்டக்காரராக இறக்காமல் , இரண்டாவதாகவும் இறக்க வாய்ப்புண்டு. எனவே ஷுப்மான் கில் உடன் ராகுல் திரிபாதி கைகோர்க்க வாய்ப்புண்டு .

MI vs KKR middle order

மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சூர்ய குமார் யாதவ் , சௌரப் திவாரி கடந்த போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டனர். இன்றைய போட்டியிலும் அவர்கள் சிறப்பாக விளையாட வாய்ப்புண்டு.

கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான இயான் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் மும்பை அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடி உள்ளனர். அவர்கள் இன்றைய போட்டியிலும் ஜொலிக்க வாய்ப்புண்டு.

MI vs KKR all rounder

ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள் ஆல்ரவுண்டர்கள் மட்டுமே மும்பை அணியைப் பொறுத்தவரைக் கடந்த போட்டியில் ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லார்ட் இவர்களை ரோகித் சரியாகப் பயன்படுத்தவில்லை . எனவே இந்த போட்டியில் அவர்களைச் சரியான இடத்தில் பயன்படுத்தினால் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ஆல்ரவுண்டர் இடத்தை ஆன்ட்ரு ரஸுல் சிறப்பாக மற்றும் திரிபாதி விளையாட வாய்ப்புள்ளது . ரஸுலில் கடந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை மும்பை அணியில் ட்ரன்ட் போல்ட் மீண்டும் மிரட்ட வாய்ப்புண்டு. முதற் பாதியில் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்புள்ளதால் மும்பை அணியின் குர்னால் பாண்டியா மற்றும் சஹர் மாயாஜாலம் செய்ய வாய்ப்புண்டு . அதே போல் கொல்கத்தா அணியில் நரேன் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் மிரட்ட வாய்ப்புண்டு.

மொத்தத்தில் இரு அணியிலும் சிறப்பான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் நரேன், ரஸுல் , மார்கன் போன்ற அசுரத்தனமான பேட்ஸ்மேன்களை பெற்றுள்ளதால் கொல்கத்தா அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இன்று IPL போட்டியில் மோத இருக்கும் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மறக்காமல் தங்களது கருத்து பிரிவில் பதிவிடுங்கள்.

More News >>