வீட்டிலேயே காஜூ கத்லி செய்யலாமே..
ஸ்வீட் வகைகளிலேயே காஜூ கத்லி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. முந்திரி பருப்பால் செய்யப்படும் காஜூ கத்லி கடைகளில் விலை அதிகமாக இருக்கும். இதை வீட்டிலேயே செய்தால் ஓரளவுக்கு கட்டுப்படி ஆகும். அதனால், தற்போது வீட்டிலேயே காஜூ கத்லி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..
தேவையான பொருட்கள்
முந்திரிப்பருப்பு – 2 கப்சர்க்கரை – 1 1/2 கப்நெய் – 2 மேசைக்கரண்டிசுடு தண்ணீர் – 3/4 கப்சில்வர் பேப்பர் – 5 (அ) 6 சீட்டுகள்குங்கமப்பூ – ஒரு பின்ச்
செய்முறை
முந்திரிப்பருப்பை பொடித்துக் கொள்ளவும். பல பகுதிகளாக பிரித்து பொடித்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பொடிக்க வேண்டாம்.
சர்க்கரையை சுடு தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, குங்கமப்பூ சேர்த்து கம்பி பாகு பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
சர்க்கரை பாகு மிகவும் திக்காகி விட்டால், சில தேக்கரண்டி சுடு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.பாகு தயாரிக்கும்போது, இடையில் அரைத்த முந்திரிபருப்பை மிகவும் குறைந்த தீயில் 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கும்போது தூளின் நிறம் மாறக் கூடாது. முந்திரிபருப்பு தூளானது வெது வெதுப்பாக இருந்தால் எடுத்து விடலாம்.
நெய்யை உருக்கி, பாகில் சேர்க்கவும். இப்போது வறுத்த முந்திரிப்பருப்பு தூளை பாகில் கொட்டி நன்கு கலந்து ஆற விடவும்.(சப்பாத்தி மாவு பதத்தை விட சிறிது திக்காக இருக்க வேண்டும்).
முந்திரிபருப்பு தூளை பாகில் சேர்க்கும்போது, மாவு கலவை சிறிது லூசாக இருந்தால், அடுப்பில் மாவு கலவையை வைத்து சிறிய தீயில் வைத்து கிளறி, தேவையான பதத்திற்கு கொண்டு வரவும்.மாவு கலவை ஆறியவுடன், நன்கு பிசைந்து செவ்வக வடிவில் 1/2 செ.மீ அளவு தடிமனாகதேய்த்துக் கொள்ளவும்.
சில்வர் பேப்பரை அதன் மேல் போட்டு டைமண்ட் வடிவில் அல்லது விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com