Dream 11 Prediction Team : KKR Vs MI போட்டிக்கான இன்றைய ட்ரீம் 11 அணிக்கான பரிந்துரை...!
ஐபிஎல் லீக் சுற்றின் ஐந்தாவது போட்டியானது இன்று இரவு 6.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையே அபுதாபியில் நடைபெற உள்ளது.ட்ரீம் லெவன் ஃபேன்டஸிக்கான உத்தேச அணியை உருவாக்க ஆடுகளத்தின் தன்மையும் , டாஸை வெல்லும் அணியையும் பொறுத்தே கனவு அணியை நிர்ணயிக்கலாம்.
அந்த வகையில் ஆடுகளமானது முதல் பாதியில் வேகப் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாகவும் , பேட்டிங் செய்வதற்குக் கடினமாகவும் இருக்கும். பிற்பாதியில் பனிப் பொழிவு இருப்பதால் பந்து வீச்சாளர்களால் நேர்த்தியாகப் பந்து வீசுவதென்பது கடினமாக இருக்கும். எனவே டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்யும்.
இந்த ஆடுகளத்தில் நடந்த முதல் போட்டியின் , முதல் பாதியில் 9 விக்கெட்டில் 6 விக்கெட்டுகளை வேகப் பந்து வீச்சாளர்களும் , சுழல் பந்து வீச்சாளர்கள் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் 5 விக்கெட்டில் 3 விக்கெட்டை வேகப் பந்து வீச்சாளர்களும் , 2 விக்கெட்டை சுழல் பந்து வீச்சாளர்களும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தால் உத்தேச கனவு அணி!
1. ரோஹித் சர்மா2. குயின்டன் தி காக் (C) 3. ஹர்திக் பாண்டியா4. கீரன் பொல்லார்ட்5. ட்ரன்ட் போல்ட் ( VC ) 6. ஜல்பிரித் பும்ரா 7.சுனில் நரேன் 8.ஆன்ட்ரூ ரஸல் 9. இயான் மோர்கன்10.ராகுல் திரிபாதி 11.குல்தீப் யாதவ்
கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தால் , உத்தேச கனவு அணி!
1. குயின்டன் தி காக்2. சூர்ய குமார் யாதவ்3. ஹர்திக் பாண்டியா 4. ஜேம்ஸ் பேட்டின்சன் 5. ட்ரன்ட் போல்ட் 6. சுனில் நரேன் ( C) 7. குல்தீப் யாதவ்8. ராகுல் திரிபாதி 9. ஆன்ட்ரு ரஸுல்10.இயான் மோர்கன் ( VC) 11. கமலேஷ் நாகர்கோட்டி