வருங்கால கணவர் போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை..
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெண்கள் மத்தியில் பிரபலம். குடும்பம் கணவன், மனைவி, உறவுகள் என குடும்ப சென்ட்டி மென்ட்டாக வெளியாகிறது. இந்த சீரியலில் ஜோடிகள் நிறைய உள்ளன. அவர்களில் கதிர். முல்லை ஜோடி பிரபலம். முல்லை என்ற கதாபத்திரத்தில் நடிக்கிறார் விஜே.சித்ரா. இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் தான் அறிமுகமானார். இப்போது ரசிகர்களுக்கு தெரித்த முகம் ஆகிவிட்டார்.
சமீபத்தில் சித்ராவுக்கும் தொழில் அதிபர் ஹேமத்துக்கும் திருமண நிச்சயம் ஆனது. தனது வருங்கால கணவர் ஹேமந்த் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்ரா வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.டிவி சீரியல் நடிகைகள் சமீப காலமாக சினிமா நடிகைகள் போல் சமூக வலைத் தளங்களில் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதுடன் விளம்பர படங்களில் நடித்து தங்களது இமேஜை வளர்த்து வருகின்றனர். டிவியிலிருந்து அப்படியே பிக் அப் ஆகி சினிமாவில் நடிக்கவும் முயன்று அதற்கான வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். வாணி போஜன் போன்ற சில நடிகைகள் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.