தனிமையிலிருக்கும் பிக்பாஸ் 4 நடிகை.. நான்கு சுவற்றுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்..
கமலின் பிக்பாஸ் 4வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வருகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு ரகசியமாக நடந்தாலும் இம்முறை போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. 100 நாட்கள் ஷோ 80 நாட்கள் மட்டுமே நடக்கும், 16 போட்டியாளர்களுக்கு பதில் 12 அல்லது 14 பேர்கள் பங்கேற்க உள்ளனர்.
பிக்பாஸ் போட்டியில் நடிகைகள் கடலோரக் கவிதைகள் நடிகை ரேகா. ஷனம் ஷெட்டி, கிரண், ஷிவானி, ரம்யா பாண்டியன், நடிகர்கள் கேப்ரில்லா, அனு மோகன், ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், சூப்பர் சிங்கர் அஜித்ம், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா, பங்கேற்க உள்ளனர் என பிக்பாஸ் 4ல் மற்றொரு மாற்றமாக இம்முறை கொரோனா தொற்றால் வாராவாரம் கமல்ஹாசன் மட்டுமே நிகழ்ச்சியின் போக்கைச் சுட்டிக்காட்ட உள்ளார். ரசிகர்கள் யாரும் நேரடியாகப் பங்கேற்க மாட்டார்கள். அநேகமாக ஜூம் வீடியோவில் இந்த கலந்துரையாடல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப் பட்ட போட்டியாளர்கள் சென்னையில் ஸ்டார் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்காகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்கள். நடிகை ஷிவானி நாராயணன் தற்போது நான்கு சுவர்களுக்குள் இருக்கும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதேபோல் ரியோராஜ் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.