ஹிட்மேன் ரோகித்தின் அதிரடியால் கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை !
ஐபிஎல் லீக் சுற்றின் ஐந்தாவது போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.முதல் போட்டியில் தோல்வி அடைந்த மும்பை அணி , வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஆட்டத்தைத் தொடர்ந்தது . முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது .
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாகக் களமிறங்கிய விக்கெட் கீப்பரும் , பேட்ஸ்மேனுமான குயின்டன் தி காக் இந்த போட்டியிலும் சோபிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் இணைந்த ரோகித் மற்றும் சூர்ய குமார் யாதவ் இருவரும் கொல்கத்தா அணியினரின் பந்துவீச்சைப் பறக்கவிட்டனர். இவர்களை கட்டுப்படுத்த இயலமுடியாமல் விழி பிதுங்கினர் கொல்கத்தா பந்து வீச்சாளர்கள்.
இந்த ஜோடியை ரன் அவுட் முறையில் மட்டுமே பிரிக்க முடிந்தது. இருப்பினும் ஒருபுறம் ரோகித் தன்னுடைய அணிக்காக ருத்ரதாண்டவம் ஆடினார்.முதல் போட்டியில் சொற்ப ரன்னில் அவுட் ஆன ரோகித் அதற்கான அதிரடியான பதிலை இரண்டாவது இன்னிங்ஸில் 54 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்சர் , 3 பவுண்டரி என 80 ரன்களை அடித்திருந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் மும்பை அணி இருபது ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை அடித்தது .
கொல்கத்தா அணிக்கு இது தான் முதல் போட்டி , அணியில் பல அனுபவம் வாய்ந்த மற்றும் அதிரடியான வீரர்களை கொண்ட அணியாக வலம் வந்த கொல்கத்தாவிற்கு ஒரு இமலாய இலக்கை முதல் போட்டியிலேயே நிர்ணயித்து நிர்பந்தத்திற்குள்ளாக்கியது மும்பை அணியின் முதல் வெற்றி .
சுனில் நரேன் இதுவரை மும்பை அணிக்கு எதிராக சோபிக்காத நிலையில் அதே சாதனையை இந்த போட்டியிலும் கடமை தவறாமல் செய்து மும்பை அணிக்கு உதவினார். கடந்த சீசனில் மும்பைக்கு எதிராக 8 போட்டியில் விளையாடி 35 ரன்களை மட்டுமே எடுத்த நரேனை இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இறக்காமல் இருந்து இருக்கலாம். அவரின் பேட்டிங் இடத்தை மாற்றியிருக்கலாம் தினேஷ் !மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மான் கில் அவரின் இடத்தை நிரூபிக்கச் சரியான ஜோடி இல்லாதது கூட காரணமாக இருந்து இருக்கலாம். ஒருவேலை ரானா மற்றும் கில் இணையை தொடக்க ஆட்டக்காரர்களாக இறக்கி இருக்கலாம் .
மேலும் இரண்டாவது இடத்தில் மோர்கனையும் பின்னர் ரஸீலையும் இறக்கி இருக்கலாம். இந்த விக்கெட்டுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு தினேஷ் கார்த்திக் இறங்கி இருக்கலாம்.ரஸீல் மற்றும் மோர்கன் போன்ற ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர்களைச் சரியான நேரத்தில் , சரியான இடத்தில் இறக்காதது கூட தோல்விக்கு ஒரு காரணம் .ஆடுகளத்தின் தன்மை பிற்பாதியில் பந்து வீச்சிற்குச் சாதகமாக இருக்காத பட்சத்தில் கொல்கத்தா அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தது மும்பை அணிக்குப் பெரிய பலமாகிப் போனது .
விக்கெட் கீப்பரும் , பேட்ஸ்மானுமான தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெறும் போது மற்றொரு கீப்பரான நாயக்கையும் அணியில் எடுத்தது ஒரு தவறான முடிவு . அவருக்கு பதில் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டரை அணியில் சேர்ந்து இருக்கலாம்.மொத்தத்தில் சரியான திட்டமிடல் , அணி கூட்டமைப்பு மற்றும் அணி மேலாண்மை போன்றவற்றில் சரியான புரிதல் இல்லாமை தான் அணியின் தோல்விக்குக் காரணம்.
எதிரணியின் இந்த பலவீனங்களாலும் , தன் அதிரடியாலும் எளிதான வெற்றியைப் பெற முடிந்தது மும்பை அணியால் . வாழ்த்துக்கள் ரோகித் !