எத்தனை கோடி கொடுத்தாலும் நோ என்றால் நோ தான் பிரபல நடிகை கூறுகிறார்
நோ என்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தம் மட்டும்தான் உள்ளது. பெண் குழந்தைகள் முதலில் அதைத் தான் படிக்க வேண்டும் என்கிறார் பிரபல நடிகை ரம்யா நம்பீசன்.மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரம்யா நம்பீசன். ஒரு மலையாள டிவியில் நேரலை நிகழ்ச்சிகளை நடத்தி சினிமாவில் நுழைந்த இவர், ஒரு நல்ல பாடகியும் ஆவார். மலையாளம், தமிழ் மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். மலையாளத்தில் சற்றே இவருக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் டைரக்ட் செய்த 'அன்போடு' என்ற ஒரு குறும்படம் பரவலாக அனைவராலும் விரும்பப்பட்டது.
இந்நிலையில் அவர் கூறியது: நோ என்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தம் மட்டும்தான் இருக்கிறது. பெண் குழந்தைகள் முதலில் அதைத் தான் படிக்க வேண்டும். என்னுடைய அப்பாவும், அம்மாவும் இதைத் தான் முதலில் எனக்குச் சொல்லித் தந்தார்கள். சினிமாவாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, நான் எனது பெற்றோர் கூறியதை இப்போதும் கடைப்பிடித்து வருகிறேன். அதன் மூலம் பல வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம். சினிமா இல்லாவிட்டாலும் எனக்கு நான் படித்த டிகிரி இருக்கிறது. எனவே எதைப்பற்றியும் கவலையில்லை. சில இடங்களில் நாம் நோ சொல்லும் போது பலருக்கும் அதனால் வருத்தமோ, கோபமோ ஏற்படலாம். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.
எத்தனை கோடி தந்தாலும் அழகைக் கூட்டுவதாகக் கூறும் கிரீம் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். 10 வருடங்களுக்கு முன் எனக்குப் பல தவறான எண்ணங்கள் இருந்தன. முன்பெல்லாம் வெள்ளையாக இருப்பதுதான் அழகு என நான் கருதினேன். இதற்கு முன்பு நான் அழகு கிரீம் விளம்பரங்களில் நடித்துள்ளேன். ஆனால் இப்போது எத்தனை கோடி தந்தாலும் அது போன்ற விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன். இது போன்ற அழகு கிரீம் விளம்பரங்கள் மக்களிடையே ஈகோவை வளர்க்கும் என்று நடிகை ரம்யா நம்பீசன் கூறினார்.