சூர்யாவின் அடுத்த படத்திற்கு ஹீரோயின் யார் தெரியுமா ?
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்திற்கு பிரியா வாரியர் ஹீரோயினாக நடிக்கப்பபோவதாக தகவல் வெளியாகி உள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்ற படத்தில் சூர்யா நடித்து வருகின்றார். இதில், ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷ¨ட்டிங் முடிந்த பிறகு, கே.வி.ஆனந்த இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலம், கே.வி.ஆனந்த் மற்றும சூர்யா மூன்றாவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மேலும், இந்தப் படத்தில், ‘ஒரு ஆடார் லவ்’ என்ற திரைப்படத்தின் டீசரில் கண்சிமிட்டல் மூலம் பிரபலமான பிரியா வாரியரை ஹீரோயினாக நடிக்க வைக்க கே.வி.ஆனந்த் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com