ஆண்ட்ராய்டு பயனர்களே, பாஸ்வேர்டுகளை திருட வருகிறான் ஏலியன்..!

கடவுச்சொல் (பாஸ்வேர்டு) மற்றும் தொடர்பு விவரங்களைத் திருடக்கூடிய 'ஏலியன்' என்னும் தீங்கிழைக்கும் கோப்பை (மால்வேர்) குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி இசட்டிநெட் என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.பணப்பரிவர்த்தனை மற்றும் வங்கி பயன்பாட்டுச் செயலிகளிலிருந்து தகவல்களைத் திருடும் செர்பெரஸ் டிரோஜன் வகையின் மற்றொரு வடிவமாக ஏலியன் பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் 226 செயலிகளைத் தாக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தாக்கப்பட்ட சாதனத்திலிருந்து குறுஞ்செய்தி (SMS) உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயல்பாடுகளிலிருந்து தொடர்பு விவரங்களைச் சேகரிப்பது, தாக்கப்பட்ட சாதனத்தில் வேறு செயலிகளை நிறுவுதல், செயல்பட வைத்தல் மற்றும் ஏற்கனவே இருக்கும் செயலிகளை நீக்குதல் போன்ற பாதிப்புகளையும் ஏலியன் செய்யக்கூடும். ஏலியன், தான் இருக்கும் சாதனத்திலிருந்து மற்றவர்களுக்குச் செய்திகளை அனுப்பக்கூடும்.

பணப் பரிவர்த்தனை மற்றும் வங்கி செயலிகள் மட்டுமின்றி ஜிமெயில், ஃபேஸ்புக், டெலிகிராம், டிவிட்டர், ஸ்நாப்சாட் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற மற்றும் சமூக ஊடக செயலிகளையும் ஏலியன் தாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

More News >>