எஸ்பிபி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் பல ஆண்டுகளாக வீடுகளில் ஒலித்த குரல் அடங்கிவிட்டது..!
திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை மோசம் அடைந்த போதும் தீவிர சிகிச்சை பலனாக உடல்நிலை படிப்படியாக தேறி வந்தது. ஒரு கட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தார். ஆனால் அவரது நுரையீரல் பலத்த சேதம் அடைந்திருந்தது. அதற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 51 நாட்கள் அவர் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.
எஸ்.பி.பி மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி தெரிவித்துள்ள இரங்கலில்.எஸ்.பி.பியை இழந்ததன் மூலம் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது. பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்து வந்த குரல் அடங்கிவிட்டது. குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் எனக் கூறி உள்ளார்.உள்துறை அமைச்சர் அமித்ஷா: மெல்லிசை குரல் மூலம் என்றென்றும் நம் நினைவுகளில் நிறைந்திருப்பார்.
இவ்வாறு இரங்கல் செய்தியில் கூறி உள்ளனர்.