ரயில்வே பணியை வழங்கும்படி இளைஞர்கள் திடீர் போராட்டம்
ரயில்வே பணி வழங்க வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திடீரென தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்கள் ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்தும் பணியமர்த்தப்படாமல் உள்ளனர். இதனால், இளைஞர்கள் பல்வேறு இடங்களில் பணி வழங்கும்படி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மும்பை மதுங்கா மற்றும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து ரயில்வே அப்ரெண்டீஸ் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால், புறநகர் எக்ஸ்பிரஸ், சிறப்பு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக அவதிக்குள்ளாகினர். போராட்டம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவாரத்தை நடத்தினர். ஆனால், அவர்கள் உடன்படாததால் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், ரயில்வே அமைச்சர் வரும் வரை போராட்டம் தொடரந்து நடைபெறும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com