இன்னிக்கு ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு... தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன் புரம் வெங்கடேஷ் பண்ணையாரின் 17வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.தென் மாவட்டத்தில் முக்கிய ஜாதியின் பெரும் புள்ளியாக வலம் வந்த இவர் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று சென்னையில் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதையொட்டி அவரது ஆதரவாளர்கள் அம்மன்புரம் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரம்மாண்ட பூஜை நடத்தி வழிபடுவார்கள்.
இதற்காக நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் திருச்செந்தூருக்கு வருவர். இதைத் தொடர்ந்து திருச்செந்தூர் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் அசம்பா விதம் ஏதும் நிகழாத வண்ணம் தடுக்க மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளை இன்று ஒரு நாள் (செப்.26) மட்டும் மூடப்படுகிறது. இதற்கான உத்தரவைத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ளார்.