எஸ்பிபி பெயரில் மத்திய அரசு விருது தர வேண்டும்.. இயக்குனர், தயாரிப்பாளர் கே.ஆர் கோரிக்கை..

திரைப்பட பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் அரசு உத்தரவின் பேரில் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபி 50 ஆண்டுகளில் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் 45 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளார். 6 முறை தேசிய விருது மற்றும் பதம்ஸ்ரீ, மாநில அரசு விருதுகள் பெற்றிருக்கிறார். அவரது மறைவையடுத்து மத்திய அரசு அவரது பெயரில் விருது வழங்க வேண்டும் என்று பிரபல படத் தயாரிப்பாளர், இயக்குனர் கே.ஆர்அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவு காரணமாக பொது மக்கள். நண்பர்கள் ரசிகர். இன்னும் சொல்லப் போனால் இயற்கையும் சேர்ந்து அழுதுக்கொண்டுதான் இருக்கிறது. அவர் பெரிய, மாபெரும் மனிதர் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. எஸ் பிபி சார் சாகா வரம் பெற்றவர். சாகா வரம் என்று சொன்னால் உலகம் இருக்கும் வரையில் அவருடைய குரல் இருந்து கொண்டே இருக்கும். இதுதான் சாகாவரம் பெற்றவர் மகிமை.

நம் நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே ஒரு பொக்கிஷம் எஸ்பி பி சார். மத்திய அரசுக்கு என்னுடைய வேண்டுகோள் இதுதான். இனி வருங்காலத்தில் பாடகர்களுக்குத் தேசிய விருது என்பதை எஸ்பிபி சார் பெயரில் கொடுத்தால் மக்களும் சந்தோஷப்படுவார்கள், வாங்குபவர்களும் பெருமைப்படுவார்கள். இதனை மாநில அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இயக்குனர் கே.ஆர் கூறி உள்ளார்.

More News >>