பிரியா வாரியர் போல கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட் - கல்லூரி கலாட்டா
கேரள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் போல கண்ணடித்தால் ஒரு வருடம் இடைநீக்கம் செய்யப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்திற்காக எடுக்கபட்ட மாணிக்ய மலரேயா பூவி என்ற பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டது. ஒமர் லுலு இயக்கத்தில் ஒரு அடார் லவ் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
இந்த பாடலுக்கும் ஷான் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார். நடிகர்-தயாரிப்பாளர் - இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் இந்த பாடலைப் பாடி உள்ளார். இந்த பாடலை விட இந்த பாடலில் நடித்து உள்ள பிரியா பிரகாஷ் வாரியரின் கண் அசைவுகள் சமூக வலைதளங்களில் கண்ணாபிண்ணாவென வைரல் ஆனது.
மேலும், யூடியூப்பில் இந்த பாடல் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடியை தாண்டிவிட்டது. இதை தொடர்ந்து, பிரியா பிரகாஷ் வாரியரை இமிடேட் செய்து, பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்று சுற்றறிக்கை விட்டுள்ளது. அதில், நடிகை பிரியா வாரியார் போல் மாணவிகள் யாராவது கண்ணடித்தால் ஒரு வருடம் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவி வருகிறது.
ஆனால், இந்த தகவலுக்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ”எங்கள் கல்லூரி லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி வலை தளங்களில் பரப்பி வருகிறார்கள். கல்லூரி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்” என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com