இந்தியாவில் கொரோனா பலி 93 ஆயிரம் தாண்டியது.. ஒரே நாளில் 1089 பேர் சாவு..
இந்தியாவில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. நேற்று உயிரிழந்த 1089 பேரையும் சேர்த்துப் பலி எண்ணிக்கை 93,379 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியா, 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அமெரிக்காவில் 70 லட்சத்து 37 ஆயிரம் பேருக்குத் தொற்று பாதித்த நிலையில், 2 லட்சத்து 3704 பேர் பலியாகியுள்ளனர். பிரேசிலில் 46 லட்சத்து 89 ஆயிரம் பேருக்குத் தொற்று பாதித்த நிலையில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தினமும் 80 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்து வருகிறது. நேற்று புதிதாக 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 59 லட்சத்தைத் தாண்டியது. மொத்தம் 59 லட்சத்து 3933 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. இவர்களில் 48 லட்சத்து 49,585 பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 9 லட்சத்து 60,969 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு நேற்று மட்டும் 1089 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 93,379 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.