நிலவேம்பு குடிநீரை நான் எதிர்க்கவில்லை - கமல்ஹாசன் திடீர் பல்டி

நிலவேம்பு குடிநீரை நான் எதிர்ப்பதாக செய்தி பரப்புவது நியாயமல்ல என்றும் மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான் என்றும் கூறிய நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில், “நிலவேம்பு கஷாயத்தால் பக்க விளைவுகள் ஏற்படலாம், சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டு இருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சித்த மருத்துவர்கள் சங்கம், ”தாங்கள் கவுரவ டாக்டர் பட்டம் மட்டுமே பெற்று இருக்கீங்க; நிஜ டாக்டர் இல்லை. ஒருவகையில் நிலவேம்பை பற்றி தெரியாமல் கருத்தை பதிவு செய்த நீங்களும் ஒரு போலி மருத்துவர் தான்” என்று காட்டமான அறிக்கை வெளியிட்டது.

மேலும், நடிகர் கமல்ஹாசன் மீது தேவராஜன் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நிலவேம்பு கஷாயத்தை பற்றி கமல் தவறான தகவல்களை பரப்பி வரும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இது குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், “’நிலவேம்பு குடிநீரை நான் எதிர்ப்பதாக செய்தி பரப்புவது நியாயமல்ல. வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் என இயக்கத்தார் மருந்து விநியோகிப்பதை விரும்பாததால் கருத்து தெரிவித்தேன். மருந்தை அளவில்லாமல் கொடுப்பதை தவிர்க்கவே டுவிட்டரில் கருத்து தெரிவித்தேன்.

நிலவேம்பு குடிநீரை நற்பணி இயக்கத்தினர் விநியோகிக்க வேண்டாம் என்றுதான் கூறினேன். மற்றபடி, மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். சித்தா, அலோபதி என்ற தனிச்சார்பு எதுவும் எனக்கு இல்லை. டெங்குவை கட்டுப்படுத்த கேரள மாநிலத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

More News >>