குழந்தைகளுக்கு அருகில் செல்போனுக்கு நோ!
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான யேல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கர்ப்ப காலத்தில் இதுபோல் கதிர்வீச்சு பாதிப்புகள் ஏற்படும் அது கருவில் வளரும் குழந்தை பின்னாளில் ஹைப்பராக நடந்துகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் எனக் கூறப்படும் பட்டியலில் முதலிடத்தில் ப்ரைன் ட்யூமர் உள்ளது என்பது அதிர்ச்சிகரமான தகவல்.
முற்றிலுமாகவே குழந்தைகளிடம் செல்போன் தருவதை நிறுத்திவிடுங்கள். நீங்கள் ஸ்விட்ஸ் ஆப் செய்துவைத்திருந்தாலும் சரி பேட்டரியே இல்லாமல் வைத்திருந்தாலும் சரி குழந்தைகளுக்கு அருகில் செல்போனுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.
குழந்தைகள் விளையாடும் இடங்களுக்கு அருகிலோ தூங்கும் பகுதிக்கு அருகிலோ கூட செல்போன் உபயோகிப்பதைத் தவிருங்கள். குழந்தையுடன் காரில் பயணிக்கும் போதோ அல்லது மூடிய அறையில் இருந்தாலோ கூட செல்போன் பயன்பாடு அபாயகரமானதுதான்.
வீட்டில் முதலில் வை-ஃபை கனெக்ஷன் இருந்தால் அதற்கு முதலில் தடா போடுங்கள். தவிர்க்க முடியாது என்றாலும் குழந்தையின் நலனில் அக்கறைகொண்டு முயலுங்கள். அதிகளவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் போதிய தூக்கம் ஆகிய இரண்டும் நல்ல உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் வழிவகுக்கும்!