போதை மருந்து வழக்கு விசாரணைக்கு பிரபல நடிகை ஆஜர்.. நாளைய விசாரணையில் மற்றொரு பிரபல ஹீரோயின்
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு போதைப் பொருள் மருந்து விவகாரமாக மாறி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் போதை மருந்து தடுப்பு விசாரணை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.அதில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோனே ,ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பலரது பெயர்கள் உள்ளன.
இந்நிலையில் தீபிகா உள்ளிட்ட 4 நடிகைகளை விசாரணைக்கு ஆஜராகும் படி என் சி பி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர் . முன்னதாக தீபிகா படுகோன் மேலாளர் கரிஷ்மா பிரகாஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய அதிகாரிகள் தீபிகாவுக்கு எதிரான தகவல்களைத் திரட்டினார்.
தீபிகா விளம்பர பட ஷுட்டிங்கில் கோவாவில் இருந்த நிலையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்ட தீபிகா இன்று மும்பை வந்து விசாரணைக்காக ஆஜரானார். தீபிகா விசாரணைக்கு ஆஜராக வந்த புகைப்படங்கள் நெட்டில் வைரலானது. நடிகை ரகுல் பிரீத் சிங் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.