கேரள அரசுக்கு உலக சுகாதார மையம் விருது..!
வாழ்க்கை முறை நோய்களைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார மையத்தின் சார்பில் 2020-ம் ஆண்டுக்கான விருதுக்குக் கேரள சுகாதாரத் துறை தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார மையத்தின் இயக்குனர் ஜெனரல் அறிவித்து உள்ளார். ரஷ்யா, பிரிட்டன் , மெக்சிகோ, நைஜீரியா, ஜெயின்ட் ஹெலினா, ஆர்மீனியா ஆகிய 6 நாடுகளுடன் இணைந்து கேரள சுகாதாரத் துறை இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது.
இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரத் துறை அமைச்சர் . சைலஜா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:சுகாதாரத் துறையில், கேரளாவின் அயராத முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் இந்த விருது . வாழ்க்கை முறை நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது , இலவச சுகாதார சேவை மற்றும் சிகிச்சையினை மதிப்பீடு செய்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது
.கேரள அரசு தனது மருத்துவ நெட்வர்க் மூலமாக ஆரம்பச் சுகாதார மையம் முதல் பல்வேறு நிலைகளில் ஏராளமான மருத்துவமனைகளில் சிறப்பான வசதிகளைச் செய்து உள்ளது. கொரோனா போன்ற தொற்று நோய்களின் தாக்கம் இருந்த போதிலும் வாழ்க்கை முறை நோய்களைக் கட்டுப்படுத்தியதன் மூலம் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது - மதிப்பு மிக்க இந்த விருதை வென்றெடுக்க உதவிய கேரள சுகாதார சமூகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் .
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.