எஸ்பிபி மறைவுக்காக நெஞ்சம் பதறிய பிரபல நடிகை.. நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது
கடந்த 50 வருடங்களில் 45 ஆயிரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர் பாடகர் எஸ்பி பாலசுப்பிர மணியம். அவரது மறைவு தமிழ் திரையுல கை மட்டுமல்ல இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்ட போதும் அவரைப் பற்றிய திரையுலக கலைஞர்களின் நினைவுகளும் அனுதா பங்களும் வெளிவந்த வண்ணமிருக்கிறது.
இந்திய ஜனாதிபதி, பிரதமர் முதல் தமிழக கவர்னர் மற்றும் முதல்வர் வரையிலும் ரஜினிகாந்த், கமல் தொடங்கி கடைசி நடிகர் வரையிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகைகளும் தங்களது இரங்கலை இணைய தள டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். நடிகை நயன் தாரா பாடகர் எஸ்பிபியின் தீவிர ரசிகை அவர் மனதில் துக்கத்தை அடக்க முடியா மல் அதனை வார்த்தைகளாக வெளிபடுத் தினார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு எஸ்பி பாலசுப்ரமணியம் சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களுக்கும், காரணங்களும் பொருந்தி இருக்கும்.நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது... ஆயினும் உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும். உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமேபொருந்துகிறது.
எங்கள் வாழ்வில் உங்களின் ஆளுமை அப்படி. நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியா விடை கொடுக்கிறோம். பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும். உங்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தா ருக்கும், நண்பர்களுக்கும், உங்கள் திரை உலக சகாக்களுக்கும், உலகெங்கும் பரவி இருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக் கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது...இவ்வாறு நயன்தாரா தெரிவித்துள்ளார்.