நெல்லை அருகே திருநங்கைகளுக்கு ரூ.5.கோடியில் புதிய வீடுகள்.. அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார் .
நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூர் தீன் நகரில் திருநங்கையர்கள் வாழ்வு முன்னேற்றத்திற்காக ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்டத்தின் கீழ் பசுமை வீடுகள் திட்டத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் 30 வீடுகள் கட்டப்பட்டு பணிகள் முடிந்துள்ளது. இதனை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி கலந்து கொண்டு புதிய வீட்டினை திறந்த வைத்துபயனாளிகளுக்கு வழங்கினார் . இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத்துறை சார்பில் அம்மா நடமாடும் நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்தம் , ஆம்புலென்ஸ் வாகனத்தின் சேவையையும் தொடங்கி வைத்தார் .
பின்னர் நெல்லை மாவட்டம் கொண்டாநகரில் 543.20 கோடி ரூபாய் மதிப்பில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில்,புளியங்குடி நகராட்சிகள்,திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள இராஜபாளையம்,சிவகாசி,திருத்தங்கள் நகராட்சிக்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. பணிகள் சுமார் 78 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் . இந்நிலையி் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி நீரேற்று நிலையம், நீர் எடுக்கப்படும் கிணறுகள் , நீர் சுத்திகரிப்பு நிலையம் , உள்ளிட்ட கட்டுமானப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர் , இந்த திட்டப்பணிகள் 31-12-20 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார் .