இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர்

டெல்லியில் நடைபெற்ற 2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா உள்பட 84 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இதில், 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 84 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, இசைஞானி இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உள்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>