புதுக்கோட்டை சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

பணியின் பெயர்: சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர்

பணியிடங்கள்: 817

சத்துணவு அமைப்பாளர் – 265

சமையல் உதவியாளர் – 552

சத்துணவு அமைப்பாளர் பணியிட விவரங்கள்:

பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், குறிப்பிட்ட தேதியில் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

பழங்குடியினர் எனில் எட்டாவது தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் பணியிட விவரங்கள்:

பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்.

வயது: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 வயது பூர்த்தியடைந்தும் குறிப்பிட்ட தேதியில் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள்/ நகராட்சிகளில் மட்டுமே விண்ணப்பம் செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களில் 30.09.2020 வரைபிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

More News >>