காதலன் பிறந்தநாளுக்கு 25 லட்சம் செலவு செய்த தமிழ் நடிகை! வாயை பிளக்கும் ரசிகர்கள்..
'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா, 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வசப்பட்டார்.அந்த நிமிடத்தில் இருந்து இந்தியா முதல் வெளிநாடு வரை ஜோடி புறாக்கள் போல உல்லாசமாக சுற்றி வருகிறார்கள்.எப்பொழுது கொரோனா ஊரடங்கு முடியும் என்று காத்து கொண்டிருந்தவர்கள் ஊரடங்கு முடிந்த அடுத்த நாளே ஜோடி போட்டு கொண்டு தனி விமானத்தில் கோவா சென்றனர்.அவர்கள் கோவாவிற்கு தனி விமானத்தில் சென்ற புகைப்படங்கள் யாவும் வெளியாகின.
கோவா சென்றவுடன் முதலில் நயன்தாரா தாயாரின் பிறந்தநாளை கொண்டாடிய பிறகு தனது அன்பு மிகுந்த காதலான விக்னேஷ் சிவன் பிறந்ததினத்தை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்.சினிமாவில் காதலர்களுக்கு இடையே நிகழுவது போல பெரிய கேக்,பிரம்மாண்டமான அலங்காரம் செய்யப்பட்ட அறை,இசைப்பாடல் என்று ஒரே கொண்டாட்டம் தான்.. கொண்டாட்டத்தை அப்படியே படம்பிடித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த ஒரு நாள் கூத்துக்கு நயன்தாரா 23 லட்சம் செலவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.